fbpx
Homeபிற செய்திகள்போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

மாணவர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கருத்தில் கொண்டு 1/04/22 அன்று கோவை புலியகுளம் புனித அந்தோணியார்உயர்நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

போதை பழக்கத்தில் சிக்காமல் வாழ்வது, சிக்கினால் மீண்டு வருவது, போக்சோ சட்டங்கள், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளியின் தலைமையாசிரியை அமலோற்பவ மேரி “மாணவர் எப்படி எதிர்காலத்தை வகுத்து கொள்ள வேண்டும்“ என்ற தலைப்பிலும், தமிழாசிரியர் இராஜேந்திரன் மாணவர்கள் “எப்படிப்பட்ட நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்“ என்ற தலைப்பிலும்,பள்ளியின் உடற்கல்வி மற்றும் தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் “எப்படி யோகா மூலம் மனதை ஒருமுகப்படுத்துவது,மாணவர்கள் தங்கள் பெற்றவருக்கு ஆற்றவேண்டிய கடமைகள்” குறித்தும் உரையாற்றினார்கள்.

நிகழ்வில் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் மாணவர்களும் கலந்துகொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img