fbpx
Homeபிற செய்திகள்பெ.நா.பாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

பெ.நா.பாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களைப் பேணும் வகையில் அனைவரையும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.

இதனடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் 80க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அடையாள அட்டைகள் வழங்க நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சியின் தூய்மைப்பணி ஆய்வாளர் பரமசிவம்,7 வது வார்டு கவுன்சிலர் வி.சவுந்தர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.விஷ்வபிரகாஷ் அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கி அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

இதில் வார்டு கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன்,சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img