fbpx
Homeபிற செய்திகள்கோவை குறு, சிறு நிறுவனங்களுக்கு சிறந்த சேவைக்காக விருது

கோவை குறு, சிறு நிறுவனங்களுக்கு சிறந்த சேவைக்காக விருது

கோயம்புத்தூர் மாவட்ட குறு, சிறு நிறுவ னங்களுக்கான வசதியாக்க குழு மூலம் கடந்த 2021-22ம் ஆண்டில் குறு, சிறு நிறுவனங்களுக்கு தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருதை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்கான துறை அமைச் சர் நாராயண தத் ரானே, டெல்லியில் வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சேம்பர் மூலம் இவ்விழா நடந்தது.
கோயம்புத்தூர் மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு தலைவர்/ தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்கக்குழு குழு செயலர் பா.கார்த்திகை வாசன், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.

2021-22-ம் நிதியாண்டில் கோயம்புத்தூர் மாவட்ட குறு, சிறு நிறுவனங்களுக் கான வசதியாக்க குழு 9 கூட்டங்கள் மூலம் 244 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் 29 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.5.48 கோடிகள் பரஸ் பரம் தீர்க்கப்பட்டது. 149 வழக்குகளில் ரூ.21 கோடிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறு மற்றும் சிறு நிறுவனங்கள் வசூலாகாத நிலுவைத்தொகைகளை (45 நாட்களுக்கு மேல்) வசதி யாக்க குழு மூலம் வசூலிக்க லீttஜீs://sணீனீணீபீலீணீணீஸீ.னீsனீமீ.ரீஷீஸ்.வீஸீ/ -விண்ணப்பித்து பயன்பெறலாம்.

படிக்க வேண்டும்

spot_img