பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண் டும். தொடர்ந்து செய்து கொள் ளும் பரிசோதனைகள் உயிரைக் கூட காப்பாற்றும் என மகளிர் மருத்துவர் நந்தினி தெரிவித்துள்ளார்.
முறையான உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான உணவைத் தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட சுகாதாரமான பழக்க வழக்கங்களுக்கு ஒவ்வொரு பெண்ணும் நேரம் ஒதுக்க வேண்டும்.
ஒரு தலைமுறைக்கு முன்பு மக்கள் உடல்நலம் சரியில்லாமல் போனால் அல்லது இறக்கும் தறுவாயில் மட்டுமே மருத்துவர்களைப் பார்ப்பார்கள். ஆனால் தங்களது சுகாதாரம் குறித்த கல்வியறிவும், விழிப்புணர்வும், மக்களிடையே இப்போது அதி கரித்திருப்பதால், தடுப்புச் சுகாதாரப் பாதுகாப்பு (ஜீக்ஷீமீஸ்மீஸீtவீஸ்மீ லீமீணீறீtலீ) இன்றைக்குப் பரவலாகக் காணப்படுகிறது.
புற்றுநோய்களுள், கருப்பைவாய் புற்றுநோய் மட்டுமே வீரியமற்ற நிலையிலிருந்து வீரிய நிலைக்குச் செல்லச் சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
சரியான இடை வெளியில் தாம்பத்திய உறவில் / உடலுறவில் ஈடுபடும் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பேப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை தவறாமல் செய்து கொள்ளும் பட்சத்தில் எளிதான வீக்கம், ஹெச்பிவி தொற்று, புற்றுநோய்க்கு முந்திய நிலை உள்பட அனைத்தையும் கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிக்கலாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் நோய்த் தடுப்பு அவசியம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பரிசோதனைகள் முக் கியமாகும்.
எலும்பு நலிவு நோய் உள்ளிட்ட எலும்பு தாது அடர்த்தி, புற்றுநோய், இதய நோய் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளைத் தொடக்க நிலையிலேயே கண்டு பிடிக்கவும், இன்னும் சிறப்பான சிகிச்சையை அளிக்கவும் உதவும்.
மார்பகப் புற்றுநோய்ப் பரிசோ தனைக்கான மேமோகிராம், கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பேப் ஸ்மியர் ஆகியவை எல்லாப் பெண்களுக்குமான பொதுவான பரிசோதனைகளாகும்.
பதின் பருவம் தொடங்கி இனப்பெருக்க வயது வரை யிலான பெண்களுக்குக் கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க, ஹெச்பிவி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
சிறிய அளவிலான தடுப்பு முனைவு பெரிய அளவிலான பாதுகாப்பைத் தரும். நோய்க்குறி அறிதல் மற்றும் பரிசோதனைகள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் மிகச் சிறந்த வாய்ப்பைத் தரும். உடல் நலத்தையும், மன நலத்தையும் பாது காக்க வேண்டியது அவசியமாகும்.
டாக்டர் நந்தினி ஏழுமலை,
மகளிர் மருத்துவர்,
ஃபோர்டிஸ் மருத்துவமனை, வடபழநி



