fbpx
Homeபிற செய்திகள்பெண்களின் மனஉறுதியை வெளிப்படுத்திய திரைப்படம் ‘தும் ஹி ஹோ நய்க்கா’

பெண்களின் மனஉறுதியை வெளிப்படுத்திய திரைப்படம் ‘தும் ஹி ஹோ நய்க்கா’

‘கஹானி கோயி பீ ஹோ, தும் ஹி ஹோ நய்க்கா’ அண்மைய பிராண்ட் திரைப்படத்தின் இந்த இறுதிவரிகள், அதன் சொற்பிறப்பியலின் (மீtஹ்னீஷீறீஷீரீஹ்) எதிர்முழக்கமாகும். ஒவ்வொரு பெண்ணிற்கும், இவ்வுலகில் அவளது இடத்தை அரவணைக்கவும், கொண்டாடவும் அளிக்கப்படும் நினைவூட்டல் ஆகும்.

தங்களின் வாழ்க்கைக்கான பொறுப்பை ஏற்கும் பெண்களுக்காக குரல்கொடுக்கும் சாம்பியன் மற்றும் உற்சாசமூட்டும் அழகியாகவும் இருக்கும் நய்க்கா, தொடக்கம் முதலே, நெகிழ்திறன்மிக்க ஆன்மாவை ஆராதிக்கும் வழிகளைக் கண்டு கொண்டது.

தற்போது, இந்த பிராண்ட், வீரியமிக்க வசன கவிதை நடையிலான உற்சாகமூட்டும் கதைகள் அடங்கிய ஒரு புதிய திரைப்படத்துடன் காலங்காலமாக பெண்கள் உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் தீர்மானம் மற்றும் வெல்ல முடியாத தாங்கும் ஆற்றலைக் கொண்டாடுகிறது.

தனித்துவமான தன் கதையின் நாயகி என்ற வகையில் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது இலக்கினை அடைவதற்காக சவால்கள் நிறைந்த ஒரு பயணத்திற்கு திட்டமிடுகிறார்கள்.

இப்படம், இளம் தொழில் முனைவர், பைக் சாகசப் பெண்மணி, மலையேறும் தாய், ஹிஜாப் அணிந்த ராப் பாடகி, திருநங்கை மருத்துவர் மற்றும் நடுத்தர வயதுடைய செஸ்மாஸ்டர் ஆகியோரின் அதீத ஆற்றல் மற்றும் மனஉறுதியை சுருக்கமாகக் காட்சிப்படுத்துகிறது.

ஒவ்வொருவரின் பாதையும் வெவ்வேறு இழைகளாய் இருந்தாலும், அவை உறுதிப்பாடு என்ற ஒரு நூலாகி இந்தப் பெண்களை ஒன்றாக பிணைக்கிறது.
ஒவ்வொரு ஃபிரேமிலும், இந்தப் படமானது உங்களுடைய சொந்தக் குரலுக்கு செவிமடுக்க ஊக்குவிப்பதுடன் உங்களுடைய கதையில் நீங்கள் மட்டுமே நாயகியாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் செய்கிறது.

நுட்பமான, ஆனால் அழகின் உருமாற்ற ஆற்றல் பற்றிய கணிசமான நினைவூட்டல்கள் உடல் ரீதியான ஆராதனைகளுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மற்றும் இயல்பு நிலை மீட்டல் போன்ற பிராண்ட் நய்க்காவின் உயிர்த் துடிப்பு, இந்தப் படத்தின் ஆற்றல் மிக்க எடுத்துரைப்பு முழுவதிலும் பின்னிப் பிணையப்பட்டிருக்கிறது.

இத் திரைப்படம் குறித்து நய்க்காவின் குழும தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் (Group CMO) ஷாலினி ராகவன் கூறியதாவது, “தனது வாழ்க்கை எடுத்துரைக்கப் போவதை கற்பனை செய்கிற மற்றும் கண்டுபிடிக்கிற ஒவ்வொரு பெண்ணின் கதையும் கூறப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும்.

ஒரு பெண் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எவ்வாறு முன் வருகிறாள் என்பது அவளது இதயம் மற்றும் உள்ளுணர்வை பொறுத்தது.

இத்திரைப்படத்தின் மூலமாக, தன் சொந்தக் கதையின் நாயகியாக அவள் ஏற்றம் பெற உந்துசக்தியாக விளங்குவோம் என்ற பொறுப்புறுதியை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அபிஜித் அவாஸ்த்தி மற்றும் சைட்வேஸ் குழுவினரால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘தும் ஹி ஹோ நய்க்கா’ -வை குட்மார்னிங் ஃபிலிம்ஸின் ஷஷங்கா சதுர்வேதி இயக்கியுள்ளார்.

இலா அருணின் திகிலூட்டும் குரல்பி ன்னணியும் டெட்சுவோநகாட்டாவின் ஒளிப்பதிவும் படத்தின் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கவை.
அக்டோபர் 4 முதல்#TumHiHoNykaa டிவி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பாகின்றன மற்றும் youtu.be/9o57TH0ZjkU – -யிலும் கண்டு மகிழலாம்.

படிக்க வேண்டும்

spot_img