fbpx
Homeபிற செய்திகள்நய்க்கா ஃபேஷன் பயணத்தில் ஆலயா எஃப்

நய்க்கா ஃபேஷன் பயணத்தில் ஆலயா எஃப்

நய்க்கா ஃபேஷனின் ஒரு மைல்கல் பிரச்சார நிகழ்வாக, ‘நக்ரேவாலி’யைக் கொண்டாடும் எங்கள் தளத்தின், புத்தம் புதுமுகமாக ஆலயா எஃப்’ஐ அறிமுகப்படுத்துகிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னோக்கு -நாகரிகப் போக்கு மற்றும் மிக அண்மைக் காலத்திய பாங்குகளை மட்டுமே வகைமைப் படுத்தும், நய்க்கா நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்டைலிஸ்ட்கள் மற்றும் நிபுணர் களின் எண்ணமும் முனைப்பும், ‘நக்ரேவா லிகளுக்காக, நக்ரேவாலிகளால்’ எனும் இப்பிரச்சாரத்தின் தனித்துவ இலக்கில் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பாக இருக்கும் இப்பிரச்சாரப் படத்தில் நய்க்கா ஃபேஷனின் புத்தம் புது திரட்டுகளை ஆரவாரமாய்க் காட்டிவரும் ஆலயாவைக் காணலாம்.

பாரம்பரிய ஆடைகள் முதல் நவநாகரிக ஆடைகள் வரை உற்சாகமான பாங்கில் ஆலயா திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.

நய்க்காவின் இணை- நிறுவனரும் நய்க்கா ஃபேஷனின் தலைமை செயல் பாட்டு அதிகாரியுமான அத்வைதாநாயர், “ஆலயாவின் தன்னம்பிக்கை, தன்னி ச்சையான இயல்பு மற்றும் அவரது சிறந்த நவநாகரிக உணர்வு அவரை நய்க்கா ஃபேஷனின் இயல்பான தெரிவாக்குகிறது.

ஒவ்வொரு மனநிலைக்கும் நிகழ்ச்சிக்கும், பறைசாற்றும் வசீகரத்திலிருந்து அன்றாட அழகு நேர்த்தி வரை, ஃபேஷன் உலகின் மிகச் சிறப்பானவற்றை வகைமைப்படுத்தி அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஃபேஷனைக் கொண்டாட ஒரு போதும் மறக்காத பெண்களுக்கான எங்களது விரிவான தொகுப்புகளுக்கு கலை தேவதை ஆலயா உயிரூட்டியுள்ளார்” என்றார்.
“ஒரு நடிகையாக மற்றும் கேமரா லென்ஸ்களுக்கு முன்பாகவே வாழும் ஒருவராக, ஃபேஷன் என்பது எனது தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கையின் பெரும் அங்கமாகும்.

எனது ஆளுமையையும் மனநிலையையும் ஒரு குறிப்பிட்ட நாளில் எவ்வாறு உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, ஆடையலங்காரத்தை பல்வேறு விதங்களில் முயற்சி செய்து பார்க்கிறேன்.

இயல்பாகவே, நய்க்கா ஃபேஷனின் முகமாக இருப்பதே ஒரு மைல்கல்லாகும். ஃபேஷன் உலகின் தவிர்க்கவியலாத் தளமாக, அவர்களது வகைமைகள் புதிய லேபிள்களையும் நாகரிகப் போக்குகளையும் கண்டறியத்தக்க வகையில் ஸ்டைல்களில் மிகச்சிறந்தவற்றை வழங்குகின்றன.

நய்க்கா ஃபேஷன் பயணத்தில் அங்கமாக இருப்பதில் பெருமையும் உற்சாகமும் கொள்கிறேன்,” என நய்க்கா ஃபேஷனுடனான நட்புறவு குறித்து ஆலயா எஃப் குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img