கோவையில் பொதுவுடமை இயக்கத்தின் புயற்பறவை எனும் பூபேஷ் குப் தாவின் வாழ்க்கை வரலாற்று நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செய லாளர் முத்தரசன் வெளியிட பல்சமய நல்லுறவு இயக் கத்தின் தலைவர் முகம் மது ரபீக் பெற்றுக் கொண்டார்.
இந்தியப் பொது வுடைமை இயக்கம் கண்ட மகத்தான தலைவர்களில் ஒருவரான பூபேஷ் குப்தாவின், அரசியல் வாழ்க்கை வரலாற்றை திரட்டி வழக்கறிஞர் கே.சுப்ரமணியன் எழுதிய பொதுவுடைமை இயக்கத்தின் புயற்பறவை , தியாகச் செம்மல் கே.பால தண்டாயுதத்தின் சிறைக்குறிப்புகள், கடிதங்களை தொகுத்து ப.பா.ரமணி எழுதிய சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள் மற்றும் வழக்கறிஞர் கே.சுப்ரமணியன் எழுதி நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளி யிட் டுள்ள ” இந்தியக் கம்யூ னிஸ்ட்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள் ” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகமான ஜீவா இல் லத்தில் நடைபெற்றது.
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இதில், மாவட்ட செய லாளர் ராஜன் வரவேற் புரையாற்றினார்.
இதில் பொதுவுடமை இயக் கத்தின் புயற்பறவை நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் வெளியிட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் பெற்றுக்கொண்டார்.
இதே போல சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள் நூலை, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் சந்தித்த முதல் வழக்குகள் நூலை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் புருஷோத்தமன், கே.சுப் ரமணியன், ப.பா.ரமணி, சி.பி.ஐ. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ந.பெரியசாமி, வி.எஸ்.சுந்தரம், மௌ. குணசேகர், இஸ்கப் மாநில பொருளாளர் கோட் டியப்பன், பல்ச மய நல்லுறவு இய க்க நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



