கோவை நீதி மன்ற வளாகத்தில் நடந்த முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இன்று தடுப்பூசிகள் செலுத்தபட்டது.
கோவை நீதிமன்றம் சார்ந்த, வழக்கறிஞர்கள் நீதிபதிகள், குமாஸ்தாக்கள், அவர் களின் குடும்பத் தினர்களுக்கு , முதல் கட்ட, மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை செலுத்த வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அருள்மொழி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் விண் ணப்பம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதி காரிகளின் முன்னி லையில், முகாம் மருத்துவர் கனிமொழி, தலை மையில், இன்றும் நாளையும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து செய் தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் அருள் மொழி கூறுகையில், இந்த தடுப்பூசி முகாம் மூலமாக இன்று 750 டோஸ்களும், நாளை 750 டோஸ்களும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் குமாஸ்தாக்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் அவர் களின் ஆதார் எண்களை பதிவு செய்து அவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளான கோவிஷீல்டு செலுத்த பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அருள்மொழி, வழக்கறிஞர்கள் சங்க செயளாளர் கலையரசன், பொருளாளர் ரவிச்சந்திரன், இணைச் செய லாளர் ரீனா, மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளான பரம சிவம், மொபினா, தங்க ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்



