fbpx
Homeபிற செய்திகள்புதிய வகை கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: விமானம் மூலம் கோவை வரும் வெளிநாட்டு பயணிகள்...

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: விமானம் மூலம் கோவை வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிர கண்காணிப்பு

உருமாறிய புதிய வகை கொரோனா நோய்த் தொற்றுப் பரவி வருவதால் தென்னாப்பிரிக்கா, ஹாங் காங், போட்ஸ்வ £னா ஆகிய 3 நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே டெல்டா பிளஸ் வகை கொரோனா நோய்த் தொற்றால் அதிகஅளவிலான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில் புதிய வகை நோய்த் தொற்று கண்டறியப் பட்டுள்ள தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தென்னாப் பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய நாட்டு பயணிகளை தனிமைப் படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளில் இருந்து கோவைக்கு நேரடி விமானங்கள் இல்லை. சென்னை, கொச்சி உள்பட பிற விமான நிலையங்கள் வழியாக வர வாய்ப்புள்ளது.

இதனால் வெளிநாட்டுப் பயணிகளின் பயண விவரங்களை ஆய்வு செய்து மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்த மருத்துவக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து பயணிகள் யாரும் கோவைக்கு வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img