தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை சீரமைப்பது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.
அருகில், தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் / தொழில் ஆணையர் மற்றும் தொழில் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்தியன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/ கூடுதல் ஆட்சியர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.



