உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புகையி லையின் தீமைகளை விளக்கும் ‘டிஜிட்டல் ஃபிளிப்புக்‘ அறிமுகம் செய்யப்பட்டது.
புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர் குகன் தலைமையில், புகையிலையின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிஜிட்டல் ஃபிளிப்புக்கை அறிமுகப்படுத்தியது.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் 15 பக்கங்கள் கொண்ட இந்த ஃபிளிப்புக், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் முன்னிலையில், போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில்குமார் வெளியிட்டார்.
டாக்டர் குகன் கூறியதாவது: புகையிலையால் ஏற்படும் தீமைகள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச் சைகள் என்ன என்பது தொடர்பான உரையாடல்கள் மற்றும் அனிமேஷன் வீடியோ விழிப்புணர்வுத் தகவல் இந்த ஃபிளிப்புக்கில் உள்ளது.
இந்த ஃபிளிப்புக், ஒரு புத்தகத்தின் பக்கங்களை புரட்டுவது போன்ற உணர்வை கொடுக்கும்படி வடிவ மைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் புகையிலை உப யோகிப் பதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட் டுள்ளது.
இந்தியா விலேயே இது முதல் முயற்சி. சிகரெட்டில் இருந்து வரும் புகையில் குறைந்தது 50 புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் (கார்சினோஜென்கள்) உள்ளன.
அவை நுரையீரல் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவை தொண்டை, உணவு-குழாய், கல்லீரல், பித்தப்பை, இதயம், கணையம், சிறுநீர் ஆகியவற்றை பாதிக்கின்றன.
சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் சில சமயங்களில் இரத்த புற்றுநோய் கூட ஏற்படலாம். புகைபிடிப்ப வர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 30-&40% அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் மற்றும் இயக்குநர் டாக்டர் பி.சுகுமா ரன், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை யின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆர்.கார்த்திகேஷ் உட்பட பலர் பங் கேற்றனர்.



