fbpx
Homeபிற செய்திகள்பிரமல் லாக்டோ கேலமைன் தூதராக நடிகை பிரியங்கா மோகன்

பிரமல் லாக்டோ கேலமைன் தூதராக நடிகை பிரியங்கா மோகன்

பிரமல் பார்மா லிமிடெட்டின் நுகர்வோர் தயாரிப் புகள் பிரிவு, அதன் முதன்மை சரும பராமரிப்பு பிராண்டான லாக்டோ கேலமைன் தூதராக, தென் னிந்திய திரைப்பட நட்சத்திரம் பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘கிளியர் மேட் பேலன்ஸ்டு ஃபேஸ்’ என்ற புதிய பிராண்ட் பிரச்சாரத் தின் மூலம், லாக்டோ கேலமைன், நுகர்வோரின் எண்ணெய் சரும பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்க மாகக் கொண்டுள்ளது.

கன்சூமர் ப்ராடக்ட் டிவிச-னின் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ் பஜாஜ் கூறுகையில், “நவீன பெண்ணுக்கு, ஆரோக்கியத்திற்கான முழு மையான அணுகுமுறை முக்கியமானது மற்றும் இது சரும பராமரிப்புக்கும் பொருந்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தோல் பராமரிப்பில் லாக் டோ கேலமைன் வரம்பை விரிவுபடுத்துவது, அழகுப் பிரிவில் எங்கள் பிராண்ட் இருப்பை வலுப்படுத் துவதற்கும் பலப்படுத்துவதற்கும் எங்களின் உத்தியின் ஒரு பகுதியாகும்.

இது நுகர்வோரின் எண்ணெய் சரும பராமரிப்பு தேவைகளை நிவர்த்தி செய்து, அவர்கள் தெளிவான மற்றும் சமநிலையான சருமத்தை அடைய உதவுகிறது. தென்னிந்திய சந்தையில் எங்கள் தயாரிப்பு வரிசைகளை விரிவுபடுத்தும்போது பிரியங்கா மோகனுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

திரையில் கவரும் ஆளுமையைக் கொண்டுள்ளார். இது எங்கள் பிராண்டின் இலக்கு பார்வையாளர்களை அடைய அவரை மிகவும் சிறந்த பொருத்தமாக ஆக்குகிறது” என்றார்.

லாக்டோ கேலமைன் உடனான இந்த தொடர் பைப் பற்றி பிரியங்கா மோகன் பேசுகையில், “லாக்டோ கேலமைன் அதன் வளர்ச்சிப் பயணத்தில், அதன் சரும பராமரிப்பு தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பெண்கள் எண்ணெய் பசை சருமம் தொடர்பான பிரச்சனைகள் உட்பட எண்ணற்ற சமாளிக்க வேண்டிய சரும பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

முதன்மையாக, பெண்கள் எதிர்கொள்ளும் சரும பராமரிப்பு பிரச்சனைகள் பற்றிய ஆழமான புரிதலுடன், லாக்டோ கேலமைன், அவர்களின் தெளிவான, மேட் சருமத்தை அடைய உதவும் ஒரு முழுமையான தீர்வை வழங்குகிறது.

இந்தியப் பெண்கள் எப்படி அழகான மற்றும் சீரான தோற்றத்தை அடைய முடியும் என்பதை மறுவரையறை செய்யும் பிராண்டின் தொலைநோக்கை நான் பகிர்ந்து கொள்கிறேன்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img