தமிழகத்தைச் சேர்ந்த எமரால்ட் குழுமத்தின் அங் கமுமாகிய ஜூவல்ஒன், (JewelOne),சேலம், புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில், நேற்று (ஏப்.29) மிகப் பிரம்மாண்டமான ஷோரூமைத் திறந்துள்ளது.
ஏற்கனவே சேலத்தில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இந்த ஷோரூம், தற்போது பிரம்மாண்டமாக புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய ஷோரூமை எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேல £ண் இயக்குனர் கே. சீனிவாசன், துணை மேல £ண் இயக்குனர் சக்தி சீனிவாசன், இயக்குனர் நிஷ்டா சீனிவாசன் மற்றும், முக்கிய சிறப்பு விருந்தினர்கள், தலைமை செயல் அதிகாரி என்.வைத் தீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்
கே.சீனிவாசன் கூறுகையில், “சேலத்தில் ஒரே தளத்தில் 2,534 சதுர அடி பரப்பளவுடன் அமைந்துள்ளது. எங்களுடைய ஷோரூம்களில் இதுவரை 30 அடிக்கும் அதிகமான முன்புற அகலம் கொண்ட முதல் ஷோரூம் இதுதான்” என்றார்.
என்.வைத்தீஸ்வரன் கூறுகையில், “சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எங்கள் பிராண்ட் – ஜூவல்ஒன், அவ்வப்போது புதுவிதமாக மாற்றி வடிவமைத்துக் கொண்டு வருகிறது.
மக்களின் மனம் கவரும் வகையில், உகந்த விலை வைர நகைக் கலெக்ஷனான ‘சியரா’ (CHIARAA – Affordable Diamond Collection), பூக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட நகைக் கலெக்ஷனான ‘அயானா’ (AYANAA – Floral Collection), நீர் வீழ்ச்சியை மையமாகக் கொண்டு வடி வமைக்கப்பட்ட வைர நகைக் கலெக்ஷனான ‘நிர்ஜரா’ (NIRJHARA – Theme Based Diamond Collection), துடிப்பான ஜெம் ஸ்டோன் நகைக் கலெக்ஷனான ‘ஜீனா (ZHEENA – Vibrant Gem Stone Collection) ஆகிய நான்கு வகையான கலெக்ஷன்களை கடந்த 12 மாதங்களில் அறிமுகப் படுத்தியுள்ளது” என்றார்.
தொடக்க விழாச் சலுகையாக, தங்கம் மற் றும் வைர நகைகளை வாங்கும்போது எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி, மகிழ்ச்சிக் கட லில் ஆழ்த்தவுள்ளது. வாடிக் கையாளர்களுக்கு இலவச சில்வர் அக்ஷய விளக்கும் வழங்கப்பட இருக்கிறது.
ஜூவல்ஒன் பிராண்டிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 14 கிளைகள் உள்ளன.



