fbpx
Homeபிற செய்திகள்பிரத்யேக சலுகைகளை வழங்க இணைந்த விவோ, ஜியோ

பிரத்யேக சலுகைகளை வழங்க இணைந்த விவோ, ஜியோ

புதுமையான உலகளாவிய ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ, ஜியோ உடன் இணைந்து தனது வாடிக் கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது.

இந்த 2 பிராண்டுகளும் தங்களின் ஜியோ எக்ஸ்க்ளூசிவ் மூலம் வாடிக்கை யாள்ளின் டிஜிட்டல் வசதியை மேம்படுத்த உள்ளன. இந்த திட்டத்தில் விவோ ஒய்21 வாடிக்கையாளர்கள் ஜியோ இணைப்பை பெறுவதன் மூலம் உடனடி கேஷ்பேக் சலுகையாக 1000 ரூபாய் பெறலாம்.

அத்துடன் ஏராளமான சலுகைகள் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை அக்டோபர் 7 முதல் விவோ ஒய்21 மாடல் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

அவர்கள் ஜியோவின் பிரத்யேக சலுகைகளை ஸ்மார்ட்போன் வாங்கிய 15 நாட்களுக்குள் ‘மைஜியோ செயலியை’ பயன்படுத்தி பெறலாம்.
இந்த தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தற்போதுள்ள மற்றும் புதிய ஜியோ பயனர்கள் அனைவரும் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த புதிய திட்டம் குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன் மரியா கூறியதாவது:

எங்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டிருக்கும். பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் சக்தி வாய்ந்த எங்களின் தயாரிப்புகளுடன் நுகர்வோரை உற்சாகப்படுத்தும் முயற்சியாக ஒரு பிரத்யேக வாடிக்கையாளர் முன்மொழிவு திட்டத்திற்காக கூட்டுசேர்ந்துள்ளோம்.

ஒய்21 மாடல் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 15 நாட்களுக்குள் ஜியோஎக்ஸ்க்ளூசிவ் திட்டத்தில் சேருவதற்கான சலுகையை வழங்குகிறோம்.

இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து வரும் காலங்களில் ஜியோஎக்ஸ்க்ளூசிவ் விவோ போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

விவோ ஒய்21 ஸ்மார்ட்போன் 16.55 செ.மீ. (6.51 இன்ச்) எச்டி+ முழுமையான டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இதில் 5000 எம்ஏச் பேட்டரியும் 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதியும் உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img