இயேசு கிறிஸ்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு வழிபாடு நடைபெற்றது.
அருட்தந்தை ரிச்சர்டு, அருட்பணி ஜான்சன் பிரதீப் ஆகியோர் தலைமையில் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
பாஸ்கா ஒளியேற்றுதல், இறைவார்த்தை வழிபாடு, வார்த்தைபாடு வழிபாடு, புனித நீர் மந்திரிப்பு, இயேசுவின் உயிர்த்த நிகழ்வு, மறையுரை, திருவிருந்து ,போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாட்டில் 2500 கத்தோலிக்கர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் ஆலயத்தில் வழிபாடு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மக்கள் குடும்பங்களோடு கலந்துகொண்டு இறை வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
40 நாள்களாக நோன்பு இருந்து அதன் மூலம் சேமித்த நிதியை ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, கல்வி வளர்ச்சிக்காக, கொடுத்து உதவினர்



