திருப்பூர் பாரதி எவ ரெஸ்ட் சுழற்சங்கங்கள் இணைந்து முன்னாள் குழந்தைத் தொழிலாளர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங் கும் விழா வீரபாண்டி விருச்சகா இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது
இந்திரா சுந்திரம் அனை வரையும் வரவேற்றார். பாரதி சுழற் சங்கத் தலைவர் ராஜலட்சுமி விழாவின் நோக்கம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றம் திட்டத் தின் இயக்குனர் டி.வி.விஜய குமார் பேசியதாவது:
வறுமை குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு சமூக காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு பல் வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் உதவியோடு கல்வி கொடுத்து 2 ஆ
ண்டுகளுக்கு பிறகு முறைசார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். மேலும் தொடர் கண்காணிப்பதோடு தமிழக அரசின் கல்வி உதவித் தொகையாக வருடத்திற்கு ஆறாயிரம் வழங்குவதன் மூலம் உயர்கல்வி பெறும் வாய்ப்பு பல மாணவ மாணவியர்களுக்கு கிடைத்துள்ளது .
கல்லூரிப் படிப்பை தொடர்கிற போது அவர் களுடைய தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்கின்ற வகையில் சுழற் சங்கங்கள் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் உதவி செய்ய முன்வருவது பாராட்டுக்குரியது.
திருப்பூர் பாரதி மற்றும் எவரெஸ்ட் சுழற்சங்கங்கள் இணைந்து 20 முன்னாள் குழந்தைத் தொழிலாளர் மாணவ-மாணவிகளுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான கற்றல் உபகரணங்கள் வழங்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மருத்துவர் சுரேஷ்பாபு பேசினார். முன்னாள் குழந்தைத் தொழிலாளர் மாணவ, -மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை சுழற்சங்க உதவி ஆளுநர்கள் எஸ். செந்தில்குமார், கோபால கிருஷ்ணன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
மண்டல ஒருங்கிணைப் பாளர் வி. பிரகாஷ் குமார் உள்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர் .
நிறைவாக திருப்பூர் எவரெஸ்ட் சுழற் சங்கச் செயலாளர் கண்ணாம்பா நன்றி கூறினார். நிகழ்ச் சியை பத்மப்பிரியா ஒருங் கிணைத்து தொகுத்து வழங்கினார்.



