fbpx
Homeபிற செய்திகள்நுண்துளை இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை கேஎம்சிஹெச் மருத்துவர்கள் சாதனை

நுண்துளை இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை கேஎம்சிஹெச் மருத்துவர்கள் சாதனை

நுண்துளை இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (கே.எம்.சி.ஹெச்.) மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இருதய நோய்க்கான அறுவை சிகிச்சை முறையில், டிரான்ஸ்கதீட்டர் வால்வு ரீபிளேஸ்மெண்ட் என்பது சமீபத்தில் அறிமுகமான சிகிச்சை முறையாகும். இம்முறையில் நோயா ளியின் பழுதடைந்த இருதய வால்வுக்கு பதில் மாற்று வால்வை ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை இல்லாமல் பொருத்துவார்கள்.

ஏற்க னவே பொருத்தப்பட்ட வால்வை மாற்றுவது என்பது மிகவும் சிக்கலானதும் அபாயம் நிறைந்ததும் ஆகும். இதை அவசரகால சிகிச்சையாக மேற்கொள்வது அரிதான விஷயமாகும்.

65 வயது மதிக்கத்தக்க நபர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது நெஞ்சுவலியும் மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. இவ ருக்கு 11 வருடங்களுக்கு முன்பு வால்வு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

ஈசிஜி, ஸ்கேன் பார்த்தபோது முன்பு மாற்றியிருந்த வால்வில் இரத்தக்கசிவு கண்டறியப் பட்டது. கனமான பொருளை சட் டெனத் தூக்கும்போது சிலருக்கு இது போன்று ஏற்படக்கூடும்.

நோயாளி மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாலும், அவருக்கு திரும்பவும் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்வது மிகவும் ஆபத்தாய் முடியும் என்பதாலும், அவருக்கு டிரான்ஸ்கதீட்டர் அயோர்டிக் வால்வு பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த முறையில் அவரது மார்பை திறக்கத் தேவையில்லாமலும் அல்லது ஹார்ட் லங் இயந்திரம் பயன்படுத்தாமலும் தொடையில் ஒரு சிறுதுளை மூலம் முன்பிருந்த வால்விலேயே ஒரு புதிய வால்வு பொருத்தப்படும்.

கேஎம்சிஹெச் இருதய நோய் நிபுணர்கள் டாக்டர் தாமஸ் அலெக் ஸாண்டர், டாக்டர் பாலகுமரன், டாக்டர் பிரசாந்த வைஜ்யநாத் ஆகி யோர் இந்த சிகிச்சையை 2 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்தனர்.

நோயாளிக்கு அடுத்த நாளே வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது. நான்காவது நாள் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார். இந்தப் புதுமையான மற்றும் சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்த மருத்துவ நிபுணர்களுக்கு கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பாராட்டுகளை தெரிவித்தார்.

நோயாளிகளின் விலைமதிப்பற்ற உயிர்காத்திட கேஎம் சிஹெச் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் குறிப் பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img