புதுமையான உலகளாவிய ஸ்மார்ட் போன் பிராண்டான விவோ, தனது எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை விரிவாக்கம் செய்யும் விதமாக, அதன் புதிய எக்ஸ்70 மாடல் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய எக்ஸ்70 புரோ மற்றும் எக்ஸ்70 புரோ+ ஸ்மார்ட் போன்களில் அல்ட்ரா-சென்சிங் கிம்பல் மற்றும் விவோவின் புரபஷனல் இமேஜிங் வி1 சிப் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் 32எம்பி முன்புற கேமராவும் 50எம்பி + 48எம்பி + 12எம்பி + 8 எம்பி என 4 பின்புற கேமராவும் எக்ஸ்70 புரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. எக்ஸ்70 புரோ மாடலில் 50எம்பி + 12எம்பி + 12எம்பி + 8 எம்பி என 4 பின்புற கேமராக்கள் உள்ளன.
எக்ஸ்70 புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வளைந்த 3டி ஸ்கிரீனை கொண்டுள்ளது. எக்ஸ்70 புரோ பிளஸ் எனிக்மா பிளாக், எக்ஸ்70 புரோ காஸ்மிக் பிளாக், அரோரா டான் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.
எக்ஸ்70 புரோ பிளஸ் (12+256ஜிபி) ஸ்மார்ட் போனின் விலை ரூ.79,990. இது வரும் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. எக்ஸ்70 புரோ (8+128ஜிபி) ரூ.46,990-க்கும், 8+256ஜிபி ரூ.49,990-க்கும், 12+256ஜிபி ரூ.52,990-க்கும் வரும் 7-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
விவோ இந்தியா ஸ்டோர், பிளிப்கார்ட், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும். இது குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன் மரியா கூறியதாவது:
ஜீயஸ் நிறுவனத்துடன் இணைந்து எங்களின் புதிய எக்ஸ்70 மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் உள்ள ஜீயஸ் ஆப்டிக்ஸ், தொழில்முறை இமேஜிங் வி1 சிப் மற்றும் அல்ட்ரா சென்சிங் கிம்பல் கேமரா ஆகியவை பயனீட்டாளர்களின் புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும்.
எக்ஸ் கேர் பிரீமியம் சேவைகளுடன் விவோ எக்ஸ் 70 மாடல் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மகிழ்ச்சியையும் தரும் என்று நம்புகிறோம் என்றார்.



