நவி யு.எஸ்.டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் ஃபண்ட் (Navi US Total Stock Market Fund) என்னும் புதிய நிதித் திட்டத்தை பெங்களூரைச் சேர்ந்த நவி மியூச்சுவல் ஃபண்ட் (Navi Mutual Fund) நிறுவனம் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் திரட் டப்படும் நிதி, மிகப் பெரிய வர்த்தக நிதி பரிவர்த்தனை மையமான வான்கார்ட் டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் இ.டி. எஃப்.-ல் (Vanguard Total Stock Market ETF) முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்த நிதிக்கான செலவு விகிதம் தற்போதைய சூழ்நிலையில் ஆண்டுக்கு 0.06 சதவீதமாக மட்டுமே இருக்கும். இந்தப் புதிய நிதி ஆஃபர் திட்டத்தில் பிப்.18ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
என்எஃப்ஓ (NFO) திட்டங்களில் அன்னிய முதலீடுகள் ஏற்கப்பட மாட்டாது என்று செபி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு, இத்திட்டத்துக்கு பொருந்தாது என்று நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவி குழுமத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் கூறியதாவது:
வான்கார்டில் முத லீடு செய்வதற்கான வாய்ப்பை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நவி யு.எஸ். டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் ஃபண்ட் திட்டத்தின் மூலம் முதன்முறையாக இந்திய சில்லறை முதலீட்டாளர்கள், முழு அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குகிறோம்.
முதலீட்டாளர்களுக்கு குறைந்த செலவில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதே முக்கிய நோக்கம் ஆகும். வெளிப்படைத்தன் மையுடன் நிர்வகிக்கப்படும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் எங்கள் நிறுவனத்தால், இந்த ஆண்டு துவக்கப்பட் டுள்ள மூன்றாவது நிதித் திட்டம் இது.
ஜனவரியில் நவி நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Next 50 Index Fund), நவி நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Bank Index Fund) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினோம்.
இவை இரண்டும் அந்தந்தப் பிரிவுகளில் அன்றைய தேதியின்படி குறைந்த விலை குறியீட்டு நிதித் திட்டங்களாகும். மார்ச் மாத இறுதிக்குள் மேலும் 3 புதிய நிதித் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார்.



