கடல்சார் பாக்டீரியாவில் இருந்து தோல் தொடர்புடைய நோய்களை குணப் படுத்தவல்ல உயிரிமெலனின் (பியோமெ லனின்) தூய நிறமியை பிரித் தெடுக்கும் முறைக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கழகத் தின் அறிவுசார் காப்புரிமை மையம் சார்பில் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக 7-வது காப்புரிமை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மெலனின் என்பது அதிமுக்கியமான நிறமியாகும். இது மனிதர்கள் மற்றும் விலங் குகளின் தோல், முடி மற்றும் கண் நிறத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
சூரிய ஒளியால் ஏற்படும் மோசமான சரும சேதங்களை தடுக்கும் இயற்கையான தடுப்பரணாக மெலனின் திகழ்கிறது. மெலனின் உற்பத்தியினால் கிடைக்கும் மெலனோசைட்டுகள் சூரிய ஒளியை கிரகித்து செல்களில் உள்ள மரபணு பொருளை பாதுகாக்கிறது.
உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், அல்பீனிசம் போன்ற சரும நோய்கள் மற்றும் புற்று நோய்கள் மெலனின் குறைபாட்டால் ஏற்படும்.
புறஊதா கதிர்களின் பாதிப்பால் ஏற்படும் ஸ்க்வாமஸ் செல் கார்சினோமா (SCC), பாசல் செல் கார்சி னோமா (BCC)) மற்றும் மெலனோமா போன்ற புற்றுநோய்கள் மெலனின் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. பியோமெலனின் என்பது மெலனினின் ஒரு வகையாகும்.
இது தொடர்புடைய ஆய்வுகள் இந்தியாவில் மிகக் குறைவாகவே அறியப்படுகின்றன. உலகெங் கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் இறகுகள், மனிதர்கள் அல்லது விலங்குகளின் முடிகள் போன்றவற்றில் இருந்து பியோமெலனினைச் சுத்திக ரித்து தங்கள் ஆய்வுகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
அதிகளவில் பியோமெலனினை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய இவை போதுமானதாக இல்லை. எனவே இத்தகைய மெலனின் அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்ய பாக் டீரியாக்கள் பெரும் மூலமாக கருதப்படுகின்றன.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நுண்உயிர் தொழில்நுட்பத் துறையில் பேராசிரியர் முனை வர் கே.பிரீத்தி, ஆராய்ச்சி மாணவர் முனைவர் பி. சதீஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக விசாகப்பட்டினம் மற்றும் சென்னை கடற்கரைப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கடல் மண் மாதிரிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கடல் சார் ஸ்ட்ரெப்டோமைசஸ் பிரித்தெடுக்கும் முறைகளை பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டு, புதிய முறையினை கண்டறிந்தனர்.
மேலும் இதற்கான காப்புரிமைக்காக கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. பல தரப்பட்ட தேர்வு முறைகளை கடந்து, கடந்த ஜன.27-ம் தேதி இந்திய காப்புரிமை அலுவலகத்தால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
பியோமெலனின் நிறமி இன்று வரை பாக்டீரியா மூலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட வில்லை. பியோமெலனின் வணிக ரீதியாக எங்கும் கிடைப்பதில்லை. இந்த புதிய செயல்முறை மூலம் அதிகளவில் பியோமெலனின் உற்பத்தி செய்ய முடியும்.
மேலும் இக்கணக்கெடுப்பு விட்டிலிகோ, அல்பினிசம் மற்றும் மெலிஸம்மா போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சை அளிக்க தேவையான நிறமிகளை உற்பத்தி செய்ய வழிவகை செய்கிறது.
பியோ மெலனின் நிறமியானது உணவு, மருந்து மற்றும் அழகு சாத னைத் தொழில்களில் சிவப்பு நிறத்திற்கான பக்கவிளைவுகளற்ற உயிரி நிறமூட்டியாகவும் பயன் படுத்த முடியும்.
இது தொடர்பாக விளக்கமளித்த பாரதியார் பல்க லைக்கழக அறிவுசார் காப்புரிமை மையத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் த.பரிமே லழகன், காப்புரிமை பெறும் தொடர் செயல்முறையில் அதன் தொடர்பான காப்புரிமைகள் பற்றிய தேடுதலும், காப்புரிமை பற்றிய குறிப்புரை எழுதுவதும் இன்றியமையாதது ஆகும்.
எனவே, பல்வேறு தொடர் நிகழ்வுகளின் மூலம் பாரதியார பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பேராசிரியர்களுக்கு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதன் விளைவாக 2016 முதல் இன்று வரை 21 காப்புரிமை, இந்திய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு அதில் பல்வேறு பரிசோதனை நிலைகளைக் கடந்து 7 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
மற்றும் 14 காப்புரிமைகள் காப்பு ரிமை அலுவலகத்தின் பரி சீலனையில் உள்ளன.
இது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறனையும் அதன் சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற் கொண்டு காப்புரிமை பெற்றதன் மூலம் சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது என்றார்.
முனைவர் கே.பிரீத்தி, ஆராய்ச்சி மாணவர் பி. சதீஷ் ஆகியோருக்கு, காப்புரிமை பெற்றதற்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பி.காளிராஜ் தனது பாராட்டுதல்களைத் தெரி வித்தார்.
எதிர்காலத்தில் பல்க லைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் இதே போன்ற காப்புரிமைகள் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பேராசிரியர் முனைவர் கே. முருகேவேல், பாராட்டுகளைத் தெரிவித்தார்.



