தைவான் எக்ஸலன்ஸ் (TE) நிறுவனம், ‘வொண்டர் மைல்ஸ்’ என்ற முதல் கலப்பின பிரச்சாரத்தை இன்று (ஏப். 20) முதல் தொடங்க உள்ளது.
தைவான் எக்ஸலன்ஸ உடனடி கவனம் தேவைப்படும் காரணங்களுக்காக பங்களிப்பதையும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பங்கேற்பாளர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் அடிகள் நடக்க அல்லது ஓடுமாறு அழைப்பு விடுக்கிறது.
“வொண்டர் மைல்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று, “குழந்தை திறன் மேம்பாட்டுத் திட்டத்தை” தேர்வு செய்வதன் மூலம், பங்கேற்பாளர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருக்க முடியும்.
இந்த பிரச்சாரத்தின் மூலம், 9-14 வயதுக்குட்பட்ட சமுகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு முழுமையான கற்றலை தைவான் எக்ஸலன்ஸ் எளிதாக்குகிறது.
‘இ-கழிவு சேகரிப்பு’ என்ற திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம், பங்கேற்பாளர்கள், நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் ஒரு திறன்மிகு மின்-கழிவு சேகரிப்பு இயக்கத்தை நடத்தும் தைவான் எக்ஸலன்ஸின் முயற்சியை வலுப்படுத்தலாம்.
tewondermiles.com என்ற பிரத்யேக இணையதளம் மற்றும் #WonderMiles இன் மொபைல் அப்ளிகேஷன் மூலம் இந்த பிரச்சாரம் நடத்தப்படவுள்ளது. ஓட்டத்திற்கான இலவச பதிவு ஏப்ரல் 20 முதல் தொடங்கி மே 19 வரை நேரலையில் இருக்கும்.
அதிகாரப்பூர்வ மெய்நிகர் ஓட்டம் அல்லது 100 மைல் நடை மே 20 முதல் தொடங்கும்.ஓட்டம் முழுவதும் பல்வேறு நிலைகளில் குலுக்கல் பரிசுகள் வழங்கவும் தைவான் எக்ஸலன்ஸ் திட்டமிட்டுள்ளது.
போட்டியின் பங்கேற்பாளர்கள் ஐஃபா, அனீஸ் வே, சைபர் பவர், சினோலஜி, டோக்கியோ, விக்டர் போன்ற முன்னணி பிராண்டுகளின் பரிசுகளை இந்த போட்டிகளின் மூலம் வெல்லலாம். மேலும் தகவலுக்கு மற்றும் பதிவு செய்ய, www.tewondermiles.com
என் னும் இணையதளத்தை பார்வையிடலாம்.
தரத்தின் சான்றாக விளங்கும் தைவான் எக்ஸ லன்ஸ் பொருளாதார விவகார அமைச்சகத்தால் 1993ல் நிறுவப்பட்டது.



