fbpx
Homeபிற செய்திகள்தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே 30 கி.மீ. நீந்தி நீச்சல் வீரர் அன்சுமான் ஜிங்ரான் சாதனை

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே 30 கி.மீ. நீந்தி நீச்சல் வீரர் அன்சுமான் ஜிங்ரான் சாதனை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே 30 கிலோமீட்டர் கடலில் உள்ள பாக் ஜலசந்தியைக் கடப்பதைக் குறிக்கோளாக கொண்ட நீச்சல் வீரர் அன்ஷுமான் ஜிங்ரான் 9 மணி நேரம் 49 நிமிடத்தில் தனுஷ்கோடி வந்தடைந்தார்.

இந்த திறந்த நீர் கடல் நீச்சலை அன்சுமான் ஜிங்ரான் முடித்ததால், இது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். ஏப்ரல் 19-ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு வடஇலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து அன்சுமான் கடலில் இறங்கி, இந்தியாவின் ராமேஸ்வரம் தனுஷ்கோடி நோக்கி கடல் வழியாக நீச்சல் அடித்து வந்தார்.

அவருடன் அவரது தந்தை சந்தீப் ஜிங்ரான், பயிற் சியாளர்கள் கோகுல் காமத் மற்றும் அமித் அவலே ஆகியோருடன் ஒரு மருத்துவர் மற்றும் உயிர்காப்பாளர்கள் அடங் கிய துணைக் குழுவும் வந்தது.

சவாலான பயணம் மொத்தம் ஒன்பது மணி நேரம் 49 நிமிட நேரத்தில் முடிக்கப்பட்டு பிற்பகல் 3.04 மணிக்கு முடிந்தது. இந்த சாதனையை தமிழ்நா ட்டு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் பார்வையாளர் உறுதிப்ப டுத்தினார்.

மாணவரின் இந்த முயற்சிக்கு முத்தூட் பைனான்ஸ் ஆதரவளிக் கிறது. அவரது சாத னையை பாராட்டும் வகை யில் ராமேஸ்வரத்தில் பாராட்டு விழா நடை பெற்றது.

இதில் முத்தூட் பைனான்ஸ் தமிழ்நாடு தென் மண்டலத்தின் மண்டல மேலாளர் ஸ்ரீகாந்த் என்.எஸ்., முத்தூட் பைனான்ஸ் சிவகங்கையின் மண்டல மேலாளர் பி.ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனது சாதனை குறித்து மாஸ்டர் அன்சுமான் ஜிங்ரான் பேசுகையில், “பாக் ஜலசந்தியைக் கடக் கும் எனது பணியை முடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது பெற்றோர், சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் ஸ்பான்சர் முத்தூட் பை னான்ஸ் ஆகியோரின் துணை இல்லாமல் இது சாத்தியமில்லை. இத் தகைய சாதனைகள் என் னை புதிய உயரங்களை அடையவும், என் நாட்டை பெருமைப்படுத்தவும் தூண்டுகிறது.

மூன்று வருடங்களாக எனது இலட்சியம் ஏழு கடல் நீச்சல்களையும் முடித்து உலக சாதனை படைப்ப தாகும்” என்றார்.

அன்சுமான் இதற்கு முன் மும்பை கடற்கரையில் தொடங்கி அரபிக்கடலில் ஒரு மாதத்தில் 200 கிமீ தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

குஜராத் அரசால் ஏற்பாடு செய்யப் பட்ட சோர்வாட் முதல் வெராவல் வரையிலான 42 கிமீ வீர் சாவர்க்கர் அகில இந்திய கடல் நீச்சலையும் அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img