மும்பை பங்கு சந்தையில் பட்டிய லிடப்பட்டுள்ள கிரெசாண்டா சொலூ ஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக ப்ரீத்தி தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் ரீதியாக 36 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர் மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆரக்கிள் ஆகிய நிறு வனங்களில் முக்கிய தலைமை பொறுப்பை வகித்துள்ளதோடு, பிர்லாசாப்ட், கனடா நாட்டைச் சேர்ந்த காப் பீட்டு தொழில்நுட்ப நிறுவனமான கேஸ்டெக், டிஜிஸ்பைஸ் ஆகிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரியாகவும், இப்லெக்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட் மற்றும் சதர்லேண்ட் ஆகிய நிறுவனங்களில் முக்கிய தலைமை பதவிகளையும் வகித்துள்ளார்.
இந்த சிறப்புமிக்க பதவிகளை அவர் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் வகித்து வந்தார். இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அவர் அரும்பணியாற்றி உள்ளார்.
வாடிக்கையாளர் அனுபவம், தரவு சார்ந்த முடிவெடுத்தல், புதுமை மற்றும் கலாச்சார மாற்றம் ஆகியவற்றில் அவரது பணி மிகவும் சிறப்புமிக்கதாக உள்ளது. உலகளாவிய தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் திறமையாளர்களுடன் வலிமைமிக்க தொடர்பைக் கொண்டுள்ளார்.
டிஜிட்டல், தொழில்நுட்ப தீர்வுகள், பிபிஎம், தயாரிப்பு மேம்பாடு மற்றும் நிர்வகிக்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உரிமைகள் மேம்பாட்டு மையங்களை வடிவமைத்து செயல்படுத்தி உள்ளார்.
வணிகம், கிளவுட் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புதிய வணிக மாதிரிகளுடன் இணைந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கிடும் வகையில் அசல் உபகரண உற்பத்தியாளர் மற்றும் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களுக்கான கேம் சேஞ்சராகவும் இருந்துள்ளார்.
பல்வேறு அனுபவங்க ளைக் கொண்டுள்ள ப்ரீத்தி தாஸ் தனது தனித்துவமான அனுபவத்தின் மூலம், கிரெசாண்டா சொலூ ஷன்ஸ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். கிரெசாண்டா சொலூஷன்ஸ் நிறுவனம் டிஜிட்டல் மீடியா சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தேவையான சாப்ட்வேர் சேவைகளை வழங்கி வருகிறது.
அதன் சாப்ட்வேர் சேவைகளைப் பொறுத்தவரை பல்வேறு வணிக பயன்பாடுகளுக்கான ஆன்சைட்- ஆப்ஷோர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப ஆலோச னை மற்றும் பராமரிப்பு, சோதனை மற்றும் இடம்பெயர்வு சேவைகள் ஆகியவை அடங்கும்.



