Homeபிற செய்திகள்அகில இந்திய பிஎஸ்ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கோலாகலமாக தொடங்கியது

அகில இந்திய பிஎஸ்ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கோலாகலமாக தொடங்கியது

கோவையில் 60-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் முதலாம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக இந்த போட்டிகள் துவங்கியது. 60-ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது.
போட்டிகளை பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் காயத்ரி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.

இப்போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 1,00,000 மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 75,000 மற்றும் கோப்பையும், மூன்றாம் இடத்தை பெறும் அணிக்கு ரூபாய் 40,000, நான் காம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 30,000- மற்றும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூபாய் 10,000- வழங்கபட உள்ளது.

பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூபாய் 75,000 மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசு ரூபாய் 50,000- மற்றும் கோப்பையும், மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு தலா ரூபாய் 25,000- மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு ரூ.10,000- என மொத்தம் ரூபாய் 4,35,000 பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

30-ஆம் தேதி நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவிற்கு பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலை வரும், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு அரசு பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந் தினராகவும், சக்தி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம்.மாணிக்கம், சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவருமான செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img