ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், சேலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, சகி – பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை ஆலோசகர் சு.ப. அன்னம் பேசும்போது, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள், இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களால் வளர் இளம்பருவத்தினர் சந்திக்கும் பிரச்சனைகள், சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் மற்றும் அவற்றிலிருந்து மீண்டு வரும் வழிமுறைகள், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பெண்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் கல்வி மிகவும் அவசியம் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் ரா.உமா ராணி, மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஜெ.சத்யா, முனைவர் பி.கலைவாணி, முனைவர் பெ.தனலட்சுமி, முனைவர் ரா.திருப்பதி ஆகியோர் செய்திருந்தனர்.



