fbpx
Homeபிற செய்திகள்தேசிய பளு தூக்கும்போட்டியில் கிருஷ்ணகிரி முன்னாள் ஏடிஎஸ்பி தங்கப்பதக்கம் வென்று சாதனை

தேசிய பளு தூக்கும்போட்டியில் கிருஷ்ணகிரி முன்னாள் ஏடிஎஸ்பி தங்கப்பதக்கம் வென்று சாதனை

கோவாவில் நடந்த தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் ஏடிஎஸ்பி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்ததுடன், ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த 16-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரையில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என்று 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பளு தூக்கும் போட்டியில் (பென்ச் பிரஸ்) மாஸ்டர்ஸ் 140 கிலோ எடை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஏடிஎஸ்பியும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான வீரராகவன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து, தமிழகத்திற்கும், காவல் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே 1984-ம் ஆண்டு தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றவர். 2018, 2019-ம் ஆண்டுகளில் புனே, ஜலந்தர், டெல்லி ஆகிய இடங்களில் நடந்த தேசிய போட்டிகளில் 2-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பணி ஓய்வு பெற்ற பின்னரும், விடா முய்றசியாலும், ஆர்வத்தினாலும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த கிருஷ்ணகிரி முன்னாள் ஏ.டி.எஸ்.பி.க்கு அவரது நண்பர்கள், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img