fbpx
Homeபிற செய்திகள்காட்பாடியில் நரிக்குறவர் வசிக்கும் வீடுகளில் மழைநீர் புகுந்தது கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு

காட்பாடியில் நரிக்குறவர் வசிக்கும் வீடுகளில் மழைநீர் புகுந்தது கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு

வேலூர் காட்பாடி இந்திராநகர் அருகே வன்றந்தாங்கல் ஏரி தொடர் மழையினால் நிரம்பி வழிகிறது .ஏரியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்படைந்ததை அறிந்த வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் உடனடியாக ஆய்வு செய்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

காட்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வேல்முருகன், மாவட்ட கவுன்சிலர் தணிகாசலம், பகுதி செயலாளர் வன்னியராஜா, முன்னாள் கவுன்சிலரும் வட்ட செயலாளருமான அன்பு, மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img