fbpx
Homeபிற செய்திகள்தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை: உதகை ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரிக்கு 6 வது இடம்

தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை: உதகை ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரிக்கு 6 வது இடம்

உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி, இந்திய அரசின் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ள இந்திய தரவரிசைகள் 2022 பதிப்பில் ‘பார்மசி’ பிரிவில் ஒரு படி முன்னேறி தேசிய அளவில் 6வது இடத்தை பெற்றுள்ளது.

இதன் மூலம் உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி நாட்டின் சிறந்த 10 பார்மசி கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2022 சுமார் 11 பிரிவுகளில் டெல்லியில் நடந்த அரசு விழாவில் மத்திய அரசின் கல்வித் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறைகளின் கேபினட் அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்), மைசூரு 34ஆவது இடம்பெற்று இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையைத் தொடர் ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி, மைசூரு, ஜெ எஸ் எஸ் பல் மருத்துவ கல்லூரி, மைசூரு மற்றும் ஜெ எஸ் எஸ் மருத்துவ கல்லூரி, மைசூரு ஆகியவை முறையே 8வது, 12வது மற்றும் 34வது இடங்களை தத்தமது பிரிவுகளில் பெற்றுள்ளன.

ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் பி தனபால் மற்றும் கல்லூரியின் தேசிய தரவரிசை அலுவலக அதிகாரி முனைவர் கே பி அருண் ஆகியோர் இந்த விருது வழங்கும் விழாவில் அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால், நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஜெகத்குரு சிவராத்ரி தேசிகேந்திர சுவாமிகள், இணை வேந்தர் முனைவர் பி சுரேஷ், துணை வேந்தர் மருத்துவர் சுரீந்தர் சிங், பதிவாளர் மருத்துவர் பி மஞ்சுநாத், மற்றும் அனைத்து அதிகாரிகள் – ஜெ எஸ் எஸ் மஹாவித்ய பீடத்தின் செயல் அதிகாரி முனைவர் சி.ஜி.பெட்சுர்மத், செயலாளர்- பேராசிரியர் எஸ்.பி.மஞ்சுநாத் ஆகியோர் தொடர்ந்து வழங்கிவரும் ஊக்கம், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக தனது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், மருந்து நிறுவன அதிகாரிகள், மற்றுமுள்ள அனைத்துப் பங்களிப்பாளர்களின் அயராத, தன்னலமற்ற உழைப்பும், உறுதியான நேரிடையான அல்லது மறைமுகமான ஆதரவும் இன்றி இந்த புதிய உயரத்தை அடைந்திருக்க முடிந்திருக்காது என்று பதிவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img