fbpx
Homeபிற செய்திகள்தேசத்தின் மண்வளம் காப்போம்: குடியரசு தின விழாவில் ஈஷா சத்குரு உறுதி

தேசத்தின் மண்வளம் காப்போம்: குடியரசு தின விழாவில் ஈஷா சத்குரு உறுதி

கோவை ஈஷா யோகா மையத்தில் 73-ம் ஆண்டு குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. 112 அடி ஆதியோ கியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவா சல் முன்பு இவ்விழா நடைபெற்றது.

விழாவில் சத்குரு பேசுகையில், தமிழ் மக்கள் அனைவருக்கும் 73-வது குடியரசுதின நல்வாழ்த்துக்கள். நம் பாரததேசம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் உலகிலேயே மிகவும் பழமையானது; ஈடு இணையற்றது.

பொதுவாக ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால், அந்நாட்டில் உள்ள மண் வளமாக இருக்க வேண்டும். மண்ணில் இருக்கும் உயிர்சக்தி போய்விட்டால், ஒரு நாடு வளமான நாடாக உருவெடுக்க முடியாது.

துரதிருஷ்டவசமாக அத்தகைய அபாயகரமான சூழலை நோக்கிதான் நம்தேசம் சென்று கொண்டு இருக்கிறது.

இந்த குடியரசு தினநாளில் நம்மண்ணை வளமாக வைத்து கொள்ளவும், இந்த தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நலமான வாழ்வு வழங்கவும் நாம் உறுதி ஏற்போம்.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img