fbpx
Homeபிற செய்திகள்தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் வருகை - கோவை ஐஎன்எஸ்...

தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் வருகை – கோவை ஐஎன்எஸ் அக்ரானியில் ஆய்வு

ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் என்எம், விஎஸ்எம் கோவை ஐஎன்எஸ் அக்ரானிக்கு வருகை தந்தார்.

ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் என்எம், விஎஸ்எம், (ஏடிசி தலைமைப் பணியாளர், தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி) மற்றும் தென் மண்டல கடற்படை மனைவிகள் நல சங்க துணை தலைவரான கவிதா ஆண்டனி ஆகியோர் தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனமான கோவை ஐஎன்எஸ் அக்ரானிக்கு வருகை புரிந்தனர்.

ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையைப் பெற்றுக் கொண்டு, இந்நிறுவனத்தின் பயிற்சி உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.

பின்னர், கடற்படையினர் குடியிருப்பு பகுதியில் ஆர்.ஓ. கழிவு நீர் ஆலையை திறந்து வைத்ததுடன் மாலையில் மதுக்கரை முகாம் தளத்திற்குச் சென்று பிஓ (எல்) தலைமைத்துவ பயிற்சியாளர்களுடன் உரையாடி, இந்தியக் கடற்படையின் மாலுமிகளுக்குத் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறன்களை வழங்கும் பிரிவின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img