திண்டுக்கல் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பீஸ்ட் பால் அசோசியேஷன், பீஸ்ட் பால் பெடரேஷன் இணைந்து நடத்திய தென் மண்டல அளவிலான பீஸ்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இறுதிப் போட்டி நடந்தது.
இறுதி போட்டியை புரவலர் காஜாமைதீன் துவக்கி வைத்தார். பீஸ்ட் பால் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளர் பால விநாயகம் தலைமை தாங்கினார்.
பண்ணை கல்வி குழுமத்தின் தாளாளர் லீனா ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். வித்யா பார்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும், திண்டுக்கல் மாவட்ட பீஸ்ட் பால் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பீஸ்ட் பால் தேசிய தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கட், மாநில தலைவர் கவியரசு, மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண் டனர். இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உட்பட்ட ஐந்து மாநில வீரர்கள் வீராங்க னைகள் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில் பெண்கள் அணியில் முதலிடத்தை தெலுங்கானாவும், இரண்டாவது இடத்தை தமிழ்நாடும், மூன்றாவது இடத்தை கர்நாடகாவும் பெற்றது.
ஆண்கள் பிரிவில் புதுச்சேரி மூன்றாவது இடத்தையும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் தெலுங்கானா முதல் இடத்தையும் பிடித்தது.
வென்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.



