fbpx
Homeபிற செய்திகள்140 ஆசிரியர்களுக்கு விருதுகள்: திண்டுக்கல் லியோனி வழங்கினார்

140 ஆசிரியர்களுக்கு விருதுகள்: திண்டுக்கல் லியோனி வழங்கினார்

திண்டுக்கல்லில் நடந்த விழாவில் 140 ஆசிரியர்களுக்கு விருது களை திண்டுக்கல் ஐ.லியோனி வழங்கி பாராட்டினார்.

திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் சிறந்த தலைமை ஆசிரியர் விருது 2022 வழங்கும் விழா கல்லூரி செயலர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரு துக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

கல்வி மற் றும் சமூகத்திற்கான வாழ் நாளை அர்ப்பணித்த 30 நபர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் மாணவர்களுக்காக சேவை புரிந்த 90 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் மாணவர்களை முன்னேற் றப் பாதையில் கொண்டு செல்லும் பள்ளிகளை வழிநடத்தும் தலைமை ஆசிரியர்கள் 20 நபர்களுக்கு சிறந்த தலைமை ஆசிரியர் விருதும் வழங்கப்பட்டன.

இந்த விருதுகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img