திருப்பூர் மாநகராட்சி மற்றும் வெற்றி அமைப்பு சார்பில் சின்னக்காளிபாளையம் அறிவியல் பூங்கா வளாகத்தில் இன்று (28ம் தேதி) திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமையில், துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம் முன்னிலையில், மேயர் ந.தினேஷ்குமார் மாணவ மாணவிகளுக்கான பயிலரங்கம் கட்டிட நிறைவு விழா பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் , உயர்ரக பிரீகாஸ்ட் கட்டிட தொழில் நுட்பத்தில் 96 மணி நேரத்தில் உலக தரத்தில் 2400 சதுரடி பயிலரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக அரசின் பூங்காவில் ஒரு பயிலரங்கு, 12 ஏக்கரில் 50 வகை மூங்கில் பூங்கா , சிறுவர் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் மாணவர் பயிலரங்க கட்டிடம் கட்டி முடிக் கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, உமா மகேஸ்வரி, இடு வாய் ஊராட்சி தலைவர் கணேசன், டீமேஜ் பில்டர்ஸ் தலைவர்- நந்தகோபால், ராயல் கிளாசிக் குழுமம் தலைவர் – கோபாலகிருஷ்ணன், சிவராம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



