திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பொது மக்களிடமிருந்து நேற்று 173 மனுக்களை கலெக்டர் பெற்று தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நட வடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் அட்டை 9 நபர்களுக்கும், வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங் களில் பணியாற்றும் உலமா நலவாரிய உறுப்பினர் களுக்கு மானிய நிலை யில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத் தொகை ரூ.25,000க்கான கா சோலை, மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற் கான ஆணைகளை பயனா ளிகளுக்கு கலெக்டர் வழங் கினார்.
மேலும், இந்திய வலு தூக்கும் சங்கம் சார்பில் கோவையில் நடைபெற்ற ஆசிய வலுதூக்கும் போட் டியில் இந்திய அணி சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி சப்ஜுனியர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற் றார்.
அதேபோல், தமிழ் நாடு வூசு சங்கம் சார்பில் கோவையில் நடைபெற்ற மாநில வூசு போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் 10 வீரர்கள் கலந்து கொண்டு 2 தங்கம் மற்றும் 6 வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத் துள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களை கலெக்டர் பாராட்டினார்.
இக்கூட்டத்தில், டி. ஆர்.ஒ.லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், தனித்துணை ஆட்சியர் ராஜசேகர் உட் பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



