fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜாய்ஆலுக்காஸ் ஷோரூமில் ஜூலை 2 வரை வைரங்கள் கண்காட்சி

கோவை ஜாய்ஆலுக்காஸ் ஷோரூமில் ஜூலை 2 வரை வைரங்கள் கண்காட்சி

கோவையில் உள்ள ஜாய்ஆலுக்காஸ் ஷோரூமில் 1000-க்கும் அதிகமான வைர ஆபரணங்கள் கலெக்ஷனை காட்சிப் படுத்தவிருக்கிறது. உலகின் முன்னணி மற்றும் நம்பிக்கைக்குரிய வைர ஆபரண பிராண்டாகத் திகழும் டி பியர்ஸ் ஃபாரெவர்மார்க் வைரங்கள் வரும் ஜூலை 2-ம் தேதி வரை காட்சிக்கு வைக் கப்பட்டிருக்கும்.

கண்காட்சி பற்றி ஜாய்ஆலுக்காஸ் இந்தியா லிமிடெட்- ன் தலைமை செயல் அலுவலர் பேபி ஜார்ஜ் கூறியதாவது: தனித்துவதன்மை, கௌரவம் ஆகிய பண்பியல்புகளோடு ஒருங்கிணைந்ததாக வைரங்கள் இருப்பதால், பிரதியெடுக்க இயலாத ஒரு சிறப்பான தனித்தன்மையைக் கொண்டிருக்கும் இந்த வைரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க டி பியர்ஸ் ஃபாரெவர்மார்க் நிறுவனத்தோடு ஒத்துழைப்பதில் பெருமை கொள்கிறோம். ஜாய் ஆலுக்காஸ் பிராண்டின் மீது டி பியர்ஸ் ஃபாரெவர்மார்க் கொண்டிருக் கும் நம்பிக்கை மற்றும் நல்லுறவை இக் கூட்டாண்மை உறுதி செய்கிறது என்றார்.

டி பியர்ஸ் ஃபாரெவர்மார்க் இந்தியா வின் பொது மேலாளர் அமித் பிரதிஹரி கூறியதாவது: வைரங்கள் எப்போதுமே இனிமையான தருணங்கள் மற்றும் நினைவுகளோடு தொடர்புள்ளவையாக இருக்கின்றன.

இத்தகைய இனிய தருணங்களுக்கு ஏற்றவாறு தனித்துவமான மற்றும் சிறப்பான எமது வைரங்களை வாடிக்கையாளர்கள் கண்டறிவது நிச்சயம். மிகக் கடினமான தரசோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால் மிகச்சிறந்த வைரங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கிறோம்.

வைரங்களை தேர்வு செய்யும் இச்செயல்முறை, எவ்வளவு கடுமையானது என்றால் உலகளவில் கண்டறியப்படும் வைரங்களுள் 1 சதத்துக் கும் குறைவான வைரங்களே டி பியர்ஸ் ஃபாரெவர்மார்க் வைரங்கள் என அடையாளப்படுத்த ப்படுவதற்கு தகுதி பெறுகின்றன.

வைர ஆபரணத்தை வாங்கும் ஒவ் வொருவருக்கும் விலைமதிப்பில்லாத பசுமையான நினைவை அல்லது மனதை விட்டு என்றும் மறையாத உணர்வை வழங்குவதாக வைரங்கள் இருக்கின்றன.

விருப்பங்கள் மற்றும் அபிலாஷைக ளின் அதிகபட்ச தரநிலையாக வைரங்க ள் இருப்பதால் இவற்றை வாங்க வேண்டுமென்ற நுகர்வோர்களின் ஆர்வ மும், விருப்பமும் எப்போதும் வலுவாக இருக்கிறது. டி பியர்ஸ் ஃபாரெவர்மார்க் வைரம் ஒவ்வொன்றுக்கும் இந்த உணர் வுகள் என்றும் நினைவுகூரத்தக்க பிணைப் பையும், மதிப்பையும் சேர்த்து அவற்றை விலைமதிப்பற்றதாக மாற்றி விடுகின்றன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img