fbpx
Homeபிற செய்திகள்ஸ்மார்ட் ஹோம் பயன்பாடு அதிகரிப்பு: டெக்ஆர்க் ஆய்வில் தகவல்

ஸ்மார்ட் ஹோம் பயன்பாடு அதிகரிப்பு: டெக்ஆர்க் ஆய்வில் தகவல்

ஸ்மார்ட் ஹோம் பயன்பாடு இந்தியக் குடும்பங்களில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 92% பயனீட்டாளர் ஸ்மார்ட் ஹோம் நிறுவக் குரல் கட்டுப்பாடு வசதியாக உள்ளதெனத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஸ்மார்ட் ஹோம் ஏற்பு மற்றும் பயன்பாட்டுப் போக்கைப் புரிந்து கொள்ள அமேசான் இந்தியா நிறுவனத்துக்காக டெக்ஆர்க் மேற்கொண்ட ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது.

மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் 1200-க்கும் அதிகமான ஸ்மார்ட் ஹோம் பயனீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
டெக்ஆர்க் முதன்மை பகுப்பாய்வாளர் ஃபைசல் கவூஸா ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களை விவரிக்கையில், “நிலை அகன்ற அலைக்கற்றை ஊடுருவல் அதிகரிப்பு மற்றும் கோவிட்-19 கொள்ளை நோய் காரணமாக இல்லங்கள் தனியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டு உபயோகப் பொருள்களைக் குரல் மூலம் இயக்கும் ஸ்மார்ட் ஹோம் முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது.

குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் நவீன தொழில்நுட்பமோ, திறன் மேம்பாடோ இன்றி, வீட்டு உபயோகப் பொருள்களுடனான தொடர்பும், ஆணையும், கட்டுப்பாடும் இயங்கும் போது ஸ்மார்ட் ஹோம் சூழல் சிறப்பாகப் பயன்படும்” என்றார்.

நிலைத்து நிற்கும் பிராண்ட் உருவாக்கத்துக்கு “ஸ்மார்டைசேஷன்” தவிர்க்க முடியாத அம்சமாகும். தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்பதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றை ஏற்கனவே தயாரித்துக் கொண்டிருக்கும் பிராண்ட்கள் தங்கள் தயாரிப்புகளை ‘ஸ்மார்டைசேஷன்’ தொழில்நுட்பத்துக்கு மாற்றியதால் வாடிக்கையாளர் விரும்பும் பிராண்டாகச் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.

புதிய பிராண்ட்கள் ஸ்மார்ட் விளக்குகள், ஸ்மார்ட் பாதுகாப்புகள், ஸ்மார்ட் ப்ளக்குகள், ஸ்மார்ட் ஐஆர் பிளாஸ்டர்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் ஹோம் கருவிகளை அனைவரும் ஏற்கும் விலையிலும், சிறப்பான அம்சங்களுடனும் தயாரிப்பதால் தனித்துவம் பெறுகின்றன

படிக்க வேண்டும்

spot_img