fbpx
Homeபிற செய்திகள்திருச்சியில் நடந்த மாநில அளவிலான கூடோ போட்டியில் தங்கப்பதக்கங்கள் குவித்து கோவை மாணவர்கள் அசத்தல்

திருச்சியில் நடந்த மாநில அளவிலான கூடோ போட்டியில் தங்கப்பதக்கங்கள் குவித்து கோவை மாணவர்கள் அசத்தல்

திருச்சியில் மாநில அளவிலான கூடோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கோவை சார்பில் கலந்துகொண்ட கராத்தே விஜூ மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் விஷ்ணு, யஸ்வந்த் , அஜய், சாய் சைந்தவி, அக்ஷயா, மைத்திகா மற்றும் மாஸ்டர் கராத்தே விஜூ ஆகிய ஏழு பேர் கலந்து கொண்டு 6 தங்கப் பதக்கங்களும் ஒரு வெண்கல பதக்கமும் பெற்றனர்.

இந்த மாநில அளவிலான கூடோ போட்டியில் தங்கம் வென்ற ஆறுபேரும் அடுத்து இமாச்சல பிரதேசத்தில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான கூடோ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சாதனை வீரர்கள், வீராங்கனைகளை கராத்தே விஜூ மார்ஷியல் ஆர்ட்ஸ் அகா டமி நிறுவனர் மாஸ்டர் கராத்தே விஜூ, சிவக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img