ஜெ.எஸ்.எஸ். உயர் கல்வி, ஆராய்ச்சி கல்விக் கழகத்தின் பன்னிரெண்டாவது பட்டமளிப்பு விழா இன்று (டிச.17) நடைபெறுகிறது.
மைசூருவில் சாமுண்டி அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ சுத்தூர் மடத்தின் வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.ஜெ எஸ் எஸ் உயர் கல்வி ஆராய்ச்சி கல்வி கழகத்தின் வேந்தர் ஸ்ரீ சிவராத்ரி தேஷிகேந்திர மஹாஸ்வாமிஜி தலைமை தாங்க உள்ளார்.
தர்மஸ்தலம் ஸ்ரீஷேத்திரத்தின் தர்மாதிகாரி ராஜாரிஷி, டாக்டர் ஸ்ரீ டி வீரேந்திர ஹெக்டே தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றி, தங்கப் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்க இசைந்துள்ளார்.
நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், நாடு தழுவிய அளவில் உள்ள கல்வி, நிர்வாகம் மற்றும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், விருந்தினர்கள் மட்டுமின்றி மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் காணொலி முறையில் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
2138 பட்டதாரிகள் பல்« வறு துறைகளில் பட்டம் மற்றும் பட்டயமும், 47 பேர் முனைவர் பட்டமும், 7 மருத்துவர்கள் டி எம் மற்றும் எம் சி எச் ஆகிய உயர் மருத்துவ பட்டங்களையும் பெறுகிறார்கள்.
கல்வியில் சிறந்து விளங்கிய 61 பேருக்கு 83 பதக்கங்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.



