fbpx
Homeபிற செய்திகள்ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சாதிய ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், பெண் கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படும் போது விரைவாக விசா ரித்து தண்டனை வழங்க வேண்டும், கோவையில் போதைப் பொருள்கள் புழக்கக்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச்செயலாளர் சிவஞானம், மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img