கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.32 மற்றும் 37க்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை & மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.528.35 லட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும் தார்சாலை பணியின் தரத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



