fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கோவை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நூலகம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கோவை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நூலகம்

கோவை டி.ஐ.ஜி அலுவலகத்தில் சட்டம், நீதி துறை, புத்துணர்வுக்கான புத்தகங்கள் இடம்பெற்ற நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முதலாக காவல் துறை டி.ஐ.ஜி அலுவலகத்தில் திறக்கப்பட்ட முதல் நூலகம் இது தான்.

இந்த நூலகத்துக்கு தேவையான புத்தகங்களை கே. ஆர்.புரம் அரிமா சங்கத்தினர் சுப்பு, மோத்திலால் கட்டாரியா, வனஜா ஆகியோர் வழங்கி உதவியிருக்கின்றனர்.

இது குறித்து டி.ஐ.ஜி. முத்துசாமி கூறுகையில், அலுவலர்களுக்கும், போலீசாருக்கும் நீதி துறை விதிமுறைகள், சட்ட வழிமுறைகள், புத்துணர்வு தேவையென்பதனால் இந்த நூலக புத்தகங்கள் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img