fbpx
Homeபிற செய்திகள்தமிழக ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவிகள் தேர்வு

தமிழக ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவிகள் தேர்வு

கோவை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மி நாராயணசாமி யால் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா டிரஸ்ட் அகாதெமியைச் சேர்ந்த நான்கு பெண்கள் ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டி க்கு தேர்வாகி உள்ளனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் யாழினி மருதாசலம், ஸ்வேதா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி ஜெயரூபா, ஸ்ரீ ராம கிருஷ்ணா சிபிஎஸ்சி பள்ளி ருத்ரபிரியா ஆகிய நான்கு மாணவிகள் இந்த சிறப்பிடத்தைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவிகள் சந்தியா, ஸ்ரீ வர்ஷினிதேவி, ஸ்ரீதர்ஷினி தேவி ஆகியோர் மகளிர் மேம்பாட்டுக் குழு நடத்தும் கிரிக்கெட் பயிற்சி முகா மிற்குத் தேர்வாகி உள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கும், கிரிக்கெட் பயிற்சி முகா மிற்கும் சேர்த்து கோவை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 10 மாணவிகளைத் தேர்வு செய்துள்ளது.

இதில் 7 மாணவிகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அகாதெமியைச் சேர்ந்தவர்கள்.

இது வரை தமிழக ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு பல வீரர்களை உருவாக்கி தந்த இந்த அகாதெமி, தற்போது, பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் சிறந்த வீராங் கனைகளை உருவாக்கித் தந்த பெருமையையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா அகாதெமியின் பயிற்சிய £ளர் ஏ.ஜி.குருசாமி, இது வரை தமிழகம், ஐபிஎல், டிஎன்பிஎல் அணிகளுக்கு கோவையில் இருந்து பல வீரர்களை உருவாக்கித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பயிற்சியின் மூலம் தேர்வாகி உள்ள மாணவிகள் கிரிக் கெட் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.

வீராங்கனைகளை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மி நாராயணசுவாமி வாழ்த்தினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதல்வர்களும், உடற்கல்வி இயக்குநர்களும் வாழ்த்து களைத் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img