தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 62 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது, தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்), தடய அறிவியல் துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



