fbpx
Homeபிற செய்திகள்டிஜே அகாடமி மேலாண்மை கல்லூரி, பிரான்ஸ் ஸ்கூல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டிஜே அகாடமி மேலாண்மை கல்லூரி, பிரான்ஸ் ஸ்கூல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டிஜே அகாடமி மேலாண்மைகல்லூரி, குரூப் இஎஸ்சி கிளர்மான்ட் பிசினஸ் ஸ்கூல், பிரான்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கோவையில் உள்ள முன்னணி வணிகப் பள்ளியான டிஜே அகாடமி ஃபார் மேனேஜிரியல் எக்ஸலன்ஸ், குரூப் இஎஸ்சி கிளர்மான்ட் பிசினஸ் ஸ்கூலுடன் 7 செப்டம்பர் 2021 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. குரூப் இஎஸ்சி கிளர்மான்ட் என்பது 1919 இல் நிறுவப்பட்ட ஒரு சிறந்த வணிகப் பள்ளியாகும், இது பிரான்சில் கிளர்மான்ட்-ஃபெரான்ட் நகரில் அமைந்துள்ளது.

இப்பள்ளியானது மேலாண்மை மற்றும் வணிகத்தில் இளங்கலை மற்றும் பட்டதாரி திட்டங்களை வழங்குகிறது. ஒத்துழைப்பு, மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நிறுவனங் களுக்கிடையேயான கல்வி பரிமாற்றத்தை சாத்தியமாக்குகிறது.

இந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்து ழைப்பின் மூலம், இரண்டு நிறுவனங்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்க ளின் பரிமாற்றம், மாணவர்களுக்கு இரட் டைப்பட்டம், மேலாண்மைத் துறை யில் கூட்டு ஆராய்ச்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி தகவல், வெளியீடுகள் மற்றும் அறிவியல் பரிமாற்றம், மாநாடுகள், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் மற்றும் ஒத்துழைப்புக்கான பிற சாத்தியங்களை ஆராய்தல் ஆகிய செயல்பாடுகளை செயல்படுத்தும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிஜே அகாடமியின் முதல்வர் டாக்டர் ஏஜிவி நாராயணன் மற்றும் குரூப் இஎஸ்சி கிளர்மான்ட் பிசினஸ் இணை டீன் டாக்டர் ரிச்சர்ட் சோபர்னோட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img