fbpx
Homeபிற செய்திகள்ரூ.10,683 கோடியில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி

ரூ.10,683 கோடியில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி

2021-22ம் ஆண் டிற்கான நிதி நிலை அறிக்கையில் ஜவுளித் துறையில் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணிகள் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த 10 பிரிவுகளுக்கு ரூ. 10,683 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது LI(Production Linked Incentive) உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்ட த்தின் கீழ் வருகிறது. இதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகு தியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.

இதில் பேசிய நிர்வாகிகள் கூறியதாவது: இத்திட்டத்தை அறி வித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கும் பிரதம ருக்கும் நன்றிகளை தெரி வித்துக் கொள்கிறோம்.
இந்திய ஜவுளி துறையில் பருத்தியில் உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகளவில் ஜவுளித்துறையில் 70% MMF(Man Made Fibers)
(பாலிஸ்ட், நைலான், டிஸ்போஸ்) ஆக இருக்கும் நிலையில் இந்தி யாவையும் MMF ல் மிக சிறந்த உற்பத்தி நாடாக கொண்டு வர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறைந்த விலையில் பைபர்களை இந்தியாவிற்கு மத்திய அரசு கொண்டு வருவதாகவும் கூறினர். மேலும் தற்போது இந்த PLI திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரு தொகையை முதலீடு செய்து அரசு குறிப்பிட்டுள்ள இலக்கிற்கான லாபத்தை ஈட்டினால் லாபத்திற்கான ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் இத்திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தினாலும் இதற்கு முன்பே உள்ள பல திட்டங்களினாலும் முதலீட்டாளர்கள் அவர்கள் முதலீடு செய்ததில் 45%70% வரை ஊக்கத் தொகையாக பெற இயலும்.
இதனால் இந்திய ஜவுளித்துறை வரும் 5 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை காணும். இந்த திட்டத்தை தென்னிந்தியாவில் அதிகளவில் கொண்டு வருவதற்கான முயற் சியை எடுக்க இருப்பதாகவும், இது சம்பந்தமாக தமிழக முதல் வரையும் சந்தித்து 10,683 கோடி ரூபாய் திட்டத்தில் குறைந்தது 4000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண் டுள்ளோம்.

மத்திய அரசு மித்ரா திட்டத்தின் கீழ் 7 பிரிவுகளுக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கியதில் தமிழகத்திற்கு ஒரு பிரிவு ஒதுக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத் துள்ளோம்.
இந்த திட்டத்தின் கீழ் தென்னிந்தியாவிற்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக் கும். மாநில வருவாயும் உயரும். பன்னாட்டு நிறுவ னங்களும் நம்முடன் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img