fbpx
Homeபிற செய்திகள்டிசிஎஸ் நடத்திய தேசிய வினாடி வினா போட்டி: கோத்தகிரி மாணவருக்கு தங்கப் பதக்கம்

டிசிஎஸ் நடத்திய தேசிய வினாடி வினா போட்டி: கோத்தகிரி மாணவருக்கு தங்கப் பதக்கம்

டிசிஎஸ் சார்பில் நடந்த தேசிய வினாடி வினா போட்டியில் கோத்தகிரி மாணவர் சந்தீப் முருகேஷ் தங்கப்பதக்கம் வென்றார்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிதி உதவியுடன் ஏற் படுத்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவு (ஐடி), பள்ளி மாணவ, மாணவி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வினாடி, வினா போட்டியை 1999-ம் ஆண்டில் இருந்து நடத்துகிறது.

இதன் நோக்கம் தகவல் தொழில்நுட்பத் திறன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத் துவதோடு, தொழில்நுட்பத்தை முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கவும் மாணவர்களுக்கு உதவுவது தான்.

டிசிஎஸ் ஐடி பிரிவு சார்பில் நடந்த 23-வது வினாடி வினா போட்டியில் 15 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். தேசிய அளவில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வினாடி வினா மாஸ்டர் பிக்பிரைன், கிரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் சுவராஸ்யத்துடனும், உற்சாகத்துடனும் அனைத்து சுற்றுப் போட்டிகளையும் நடத்தினர்.

குழுவுக்கு 4 மாணவர்கள் வீதம் 24 குழுக்களில் இருந்து மொத்தம் 96 பேர் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். தலா 4 மாணவர்கள் கொண்ட 6 குழுக்களில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரைஇறுதிப் போட்டிக்கு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியில் இருந்து 6 பேர் தகுதி பெற்றனர்.

டிசிஎஸ் வினாடி வினா இறுதிப் போட்டிக்கு பெங்களூர் நேஷனல் பப்ளிக் பள்ளி தியான் வியாஸ், உதய்பூர் செயின்ட் அந்தோணி பள்ளி கனிஷ்கா தியோனா, வதோ தரா செயின்ட் கபீர் சர்வதேச பள்ளி கிரிஷாங் நிகம், கொல்கத்தா டெல்லி பப்ளிக் பள்ளி ஸ்மிதேந்து தத்தா, ஐதராபாத் லிட்டில் ஃபிளவர் பப்ளிக் பள்ளி முஸ்தபா அகமது, கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பப் ளிக் பள்ளி சந்தீப் முருகேஷ் ஆகிய 6 பேர் தகுதி பெற்றனர்.

இந்தஆண்டு In it for Good, @ tcs Know-How, போன்ற சுற்றுகளைக் கொண்டிருந்தது. லிட்டில் ஃப்ளவர் ஹையைச் சேர்ந்த முஸ்தபா அகமது தேசிய இறுதிப் போட்டியின் இரண்டாம் இடத்தைப்பிடித்தார்

ஹைதராபாத்தில் உள்ளபள்ளி, வெள்ளிப் பதக்கத்துடன்ரூ.20,000 மதிப்புள்ள மின்-வவுச்சரைப்பெற்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ்பப்ளிக் பள்ளி சந்தீப்முருகேஷ், டிசிஎஸ் ஐடி விஸ்ச £ம்பியன்ஷிப்பட்டம் மற்றும் கோப்பையை பெற்றார்.

தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுவவுச்சருடன் ரூ. 30,000 வழங்கப்பட்டது.
சந்தீப் முருகேஷின் சாதனைக்கு, அவரது பள்ளி கணினித் துறைத் தலைவர் பிரகாஷின் அயராத முயற்சியும், சந்தீப்பின் தீவிர ஈடுபாடுமே காரணம் என்றார் பள்ளி முதல்வர்.

படிக்க வேண்டும்

spot_img