fbpx
Homeபிற செய்திகள்ஜிண்டால் சா -ஹண்டிங் எனர்ஜி இணைந்து இணைப்பு த்ரெடிங் வசதி உருவாக்கம்

ஜிண்டால் சா -ஹண்டிங் எனர்ஜி இணைந்து இணைப்பு த்ரெடிங் வசதி உருவாக்கம்

நாட்டின் முதலாவது நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் த்ரெடிங் வசதிக்காக, குழாய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜிண்டால் சா லிமிடெட் நிறுவனம், ஹண்டிங் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்தகூட்டு செயல்பாடு மூலமாக முதன்மையான ஓசிடிஜி எனப்படும் குழாய்களில் த்ரெடிங் பதிக்கும் ஆலை, நாசிக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ என்ற சுயசார்பு இந்தியா என்ற உன்னதமான நோக்கத் துடன் இணைந்தது இந்த கூட்டு முயற்சி.

கூட்டு செயல்பாடு மூலமாக உலகின் பல் வேறு பகுதிகளுக்கு த்ரெடிங் வசதி கொண்ட முதன்மையான எண்ணெய் குழாய்களை இந்தியாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண தொழில்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இந்த கூட்டு நிறுவனத்தின் ஆரம்ப கட்ட முதலீடு 20 முதல் 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியாவில் முதன்மையான த்ரெடிங் குழாய்களுக்கான ஆண்டு சந்தை அளவு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது.

எண்ணெய் மற் றும் எரிவாயுத் துறையில் ஆழமான துளையிடல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் குழாய்களுக்கு த்ரெடிங் தேவைப்படுகிறது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டு செயல்பாடு காரணமாக இந்தியாவில் மிக நவீன ஓசிடிஜி குழாய்கள் தயாரிக் கப்படும்.

இங்கு பல்வேறு வகையான த்ரெடிங் வசதி கொண்ட குழாய்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த கூட்டு செயல்பாடு குறித்து ஜிண்டால் சா லிமிடெட் தலைமை செயல் அதிகாரி நீரஜ் குமார் கூறுகையில், ஹண்டிங் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களது கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த வலு ஓ.சி.டி.ஜி உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.

ஹண்டிங் பிஎல்சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம்ஜான்சன் கூறுகையில், இந்தியாவில் ஒ.சி.டி.ஜி சந்தையானது குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான அருமையான வாய்ப்புகளை வழங்குகிறது. ஜிண்டால் சா லிமிடெட் உடன் இந்த கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img