fbpx
Homeபிற செய்திகள்சோனியின் புதிய ஹெட்போன் அறிமுகம்

சோனியின் புதிய ஹெட்போன் அறிமுகம்

சோனி இந்தியாWH-1000XM5 அறிமுகப்படுத்தியது. இது சோனியின் விருது வென்ற 1000XM குடும்பத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சி ஆகும். இது மிகவும் பிரபலமான WH-1000XM4–இலிருந்து சோனியின் பாரம்பரிய ஆடியோ தரத்தை வழங்குகிறது.

இந்தப் புதிய மாடல் முற்றிலும் புதிய மூழ்கடிக் கக்கூடிய, கவனச்சிதறல் இல்லாத ஒலி அனுபவத்தை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.
புதிய தொழில்நுட்பங் களைச் செயல்படுத்தியதன் காரணமாக, ஏற்கனவே உள்ள துறையின் முன்னணி நாய்ஸ் கேன்சலிங் மற்றும் ஆடியோ தரத்தை WH-1000XM5-ல் முற்றிலும் புதிய மட்டத்துக்கு உயர்த்துகின்றன

.இரண்டு பிராசஸர் கட்டுப்பாடு 8 மைக்ரோ போன்களுடன் துறை யின் முன்னணி நாய்ஸ் கேன்சலேசன்.
WH-1000XM5 இதுவரை இருக்கும் சோனியின் மிகவும் அற்புதமான நாய்ஸ் கேன்சலிங் நுட்பத்துடன், இரைச்சலைப் பெருமளவு குறைக்கும் குறிப்பாக மிட்-ஹை அதிர்வெண் வரம்புகளில் குறைக்கும் இரண்டு பிராச ஸர்களால் கட்டுப்படுத்தப்படும் எட்டு மைக்ரோபோன்களுடனும் மற்றும் சுற்றுப்புறத்தைப் பொறுத்து, நாய்ஸ் கேன் சலேசனைத் தானாகவே உகந்ததாக்கும் தானியங்கு NC ஆப்டிமைசர் உடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

30 மணி நேர பேட்டரி ஆயுள் மற்றும் விரைவான சார்ஜிங் உடன் இடைவிடா இசையை அனுபவியுங்கள். WH-1000XM5 அற்புதமான 30 மணி நேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. எனவே நீண்ட பயணங்களில் கூட நீங்கள் மேம்பட்ட ஒலி அனுபவத்தை அனுபவிக்க முடியும்.

நீங்கள் அவசரத்தில் இருக்கும் போது USB பவர்டெலிவரி (PD)-ஐ பயன்படுத்தி வெறும் 3 நிமிடங்களில் 3 மணி நேரத்திற்கான சார்ஜைப் பெற முடியும்.
சோனி இந்தியா சிறப்பு முன்பதிவுச் சலுகையை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் WH-1000XM5 ஐ சிறப்பு அறிமுக விலையில் இப்போது முன்பதிவு செய்யலாம் ரூ.26,990/- இந்தச் சலுகை வரும் அக் டோபர் 7-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

படிக்க வேண்டும்

spot_img