சென்னை பேரூரா ட்சிகளின் ஆணையர் டாக்டர் ஆர்.செல்வராஜ், சேத்தூர் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா, பேருந்து நிலைய பொதுக் கழிப்பறை மற்றும் மாரியம்மன் கோவில் தெப்பம் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு ஆலோச னைகளையும் வழங்கினார். உடன், மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சு.சேதுராமன் , உதவி செயற்பொறியாளர் ப.சுரேஷ்குமார், சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் க.வெங்கடகோபு, செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பா.சந்திரகலா, உதவி பொறியாளர் பாண்டியராஜ், சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் இ.பால சுப்பிரமணியன், துணைத்தலைவர் மா.காளீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



