fbpx
Homeபிற செய்திகள்‘சுய நோயறிதல் சோதனை’ தவிர்க்க வலியுறுத்தி நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நடத்திய ‘வாக்கத்தான்’

‘சுய நோயறிதல் சோதனை’ தவிர்க்க வலியுறுத்தி நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நடத்திய ‘வாக்கத்தான்’

உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படு வதையொட்டி இந்தியாவில் தோற்று விக்கப்பட்ட முதன்மையான 4 நோயியல் பரிசோதனையக சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றான நியூபெர்க் டயக் னாஸ்டிக்ஸ், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் ஒத்துழைப்போடு ஒரு ‘வாக்கத்தான்’ நிகழ்வை நடத்தியது.

‘சுயநோயறிதல் சோதனையை தவிர்ப்போம்’(“Saying No to Self-Diagnosis”) என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் வாக்கத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜிஎஸ்கே. வேலு பேசுகையில், “பரவலாக எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய இன்டர்நெட் (இணையம்) தொடர்பு மற்றும் தகவல் பெறுவதில் தற்போதுள்ள எளிமையான அணுகுவசதியில் அதற்கே உரிய சாதக அம்சங்களுடன் சில பாதகங்களும் உள்ளன.

ஒருபுறத்தில் இது நம்மை திறனதிகாரம் பெற்றவர்களாக ஆக்குகிறது என்றாலும், மறுபுறத்தில் நமக்கு எல்லாம் சிறப்பாகத் தெரியும் என்ற போலியான / தவறான நம்பிக்கையுணர்வையும் தருகிறது.

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை நோயறிதல் செயல்பாடு மட்டுமின்றி, சுயமாக மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டலைப்பெற இன்டர்நெட்டில் தேடுகிறோம்.

உங்களது ஆரோக்கியத்திற் கும், நல்வாழ்விற்கும் தீங்கு விளைவிக்கின்ற ஆபத்தாக இது இருக்கக்கூடும். சுய – நோயறிதல் மற்றும் சுய மருந்தளிப்பு என்பது, உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று தோன்றினாலும் கூட, தவறான மருந்துகளை உட்கொள்வதும், தேவையற்ற சுய நோயறிதல் சோதனைகளை செய்து கொள்வதும் கடுமையான அச்சுறுத்தலாக மாறக்கூடும். மருத்துவ நிபுணரிடமிருந்து சரியான மருத்துவ ஆலோசனையை நாடிப் பெறுவதே நலம் பயக்கும்,” என்றார்.

2022-ம் ஆண்டுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டாக்டர் டி.செந்தமிழ் பாரி பேசுகையில், “சுய – நோயறிதல் செயல்பாட்டின் காரணமாக, அவர்களது மருத்துவ நோய்நிலை குறித்து முற்றிலுமாகத் தவறான கருத்தைக் கொண்டிருக்கிற அல்லது உண்மை நிலையை விட குறைவானதாக கருதிக்கொள்கிற இடர்ஆபத்தில் தங்களையே வைத்துக்கொள்கின்றனர்.

உடலில் வெளிப்படுகின்ற அறிகுறிகள் உள்ளார்ந்த நோய்நிலையை சுட்டிக்காட்டும் அம்சங்களாக இருப்பதால், அவற்றை உதாசீனம் செய்யக்கூடாது,” என்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் வடமண்டலத்திற்கான துணைத் தலைவர் டாக்டர் வி. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img